Paristamil Navigation Paristamil advert login

கொலைகாரக் காட்டுத்தீ - பிரதமர் நேரில் செல்கின்றார்!

கொலைகாரக் காட்டுத்தீ - பிரதமர் நேரில் செல்கின்றார்!

6 ஆவணி 2025 புதன் 11:01 | பார்வைகள் : 394


பிரான்சில் இந்த ஆண்டின் மிகப்பெரிய காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட Aude மாகாணத்திற்கு, பிரதமர் பிரோன்சுவா பய்ரூ இன்று ஓகஸ்ட் 6, புதன்கிழமை பிற்பகலில் வருகை தரவுள்ளதாக பிரதமர் பணிமனை (Matignon) அறிவித்துள்ளது.

இந்த காட்டுத்தீயில் தற்போது வரை ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர், அதில் ஒருவர் பெரும் காயத்துடன் தீவிர சிகிச்சை பெறுகிறார்.

தீ பரவல் அதிகம் நிகழ்ந்துள்ள பகுதிகளில் Saint-Laurent-de-la-Cabrerisse என்ற நகரம் குறிப்பிடத்தக்கதாகும். இங்கு மட்டும் 11,000 ஹெக்டேர் காணிகள் தீக்கிரையாகியுள்ளன.

காட்டுத்தீயை கட்டுப்படுத்த பல ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தற்போதும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ புதன்கிழமை காலை தன்னிச்சையாகவே தொடர்ந்தும் பரவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமரின் வருகை, மீட்பு பணிகளை நேரில் பார்வையிடுவதற்கும், அங்குள்ள மக்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்குமானது என பிரதமர் பணிமணை மேரும் தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்