Aude மாவட்டத்தில் பாரிய தீ! - 10,000 ஹெக்டேயர்கள் தீக்கிரை - ஏழு பேர் கவலைக்கிடம்!!

6 ஆவணி 2025 புதன் 04:08 | பார்வைகள் : 240
Aude மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயினால் இரு பொதுமக்களும், ஏழு தீயணைப்புப்படை வீரர்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
10,000 ஹெக்டேயர் காடு இதுவரை எரிந்து சாம்பல் மேடாக காட்சியளிக்கின்றன. 1,200 தீயணைப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டு, தீயை கட்டுப்படுத்தும் முயற்சி இரவிரவாக இடம்பெற்று வருகிறது. அதேவேளை, நாடுமுழுவதும் உள்ள தீயணைப்பு படையினருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. எந்நேரத்திலும் அவர்கள் அழைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Aude மாவட்டம் நோக்கிச் செல்லும் A9 மற்றும் A61 ஆகிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
**குறைந்தது மூன்று வீடுகள் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிட்டத்தட்ட 6,000 வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
நேற்று பிற்பகல் ஆரம்பித்த தீ பரவல் கட்டுக்கடங்காமல் மிக வேகமாக பரவி வருவதாகவும், குறைந்த நேரத்தில் 10,000 ஹெக்டேயர்கள் எரிந்துள்ளமை பெரும் சவாலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025