Paristamil Navigation Paristamil advert login

வானிலும் பூமியிலும் நிகழும் பேரழிவு? ஆகஸ்ட் மாதம் தொடர்பில் பாபா வங்கா கணிப்பு

வானிலும் பூமியிலும் நிகழும் பேரழிவு? ஆகஸ்ட் மாதம் தொடர்பில் பாபா வங்கா கணிப்பு

5 ஆவணி 2025 செவ்வாய் 18:38 | பார்வைகள் : 1130


2025 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் தொடர்பில் பாபா வங்கா வெளியிட்டுள்ள கணிப்பு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

பால்கன் நாடுகளின் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பாபா வங்கா, 1911ஆம் ஆண்டில் பல்கேரியா நாட்டில் பிறந்து, 1996ஆம் ஆண்டில் மரணமடைந்தவர்.

 

சிறு வயதிலேயே தனது கண்பார்வையை இழந்த பாபா வங்கா, அதன் பிறகு எதிர்காலத்தை கணிக்கும் திறனை பெற்றதாக கூறப்படுகிறார்.

 

இதன்படி, 9/11 இரட்டைக்கோபுர தாக்குதல், இளவரசி டயானா மரணம், கோவிட் என இவரது பல்வேறு கணிப்புகள் நடந்துள்ளதால், பாபா வங்கா உலகளவில் கவனம் பெற்றார்.

 

 

இந்த ஆண்டின் இறுதியில், வேற்றுகிரக வாசிகள் பூமியில் உள்ள மனிதர்களை சந்திக்க கூடும் என தெரிவித்திருந்தார்.

 

அந்த கணிப்பை வலுப்படுத்தும் வகையில், 3I/ATLAS என்ற பெயரில் விண்வெளியில் மர்மப்பொருள் பூமிக்கு வர வாய்ப்புள்ளது. இது வேற்றுகிரக வாசிகளின் திட்டமாக இருக்கலாம் என விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில், 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடர்பாக பாபா வங்கா வெளியிட்டுள்ள கணிப்பு தற்போது கவனம் பெற்றுள்ளது.

 

இதில் அவர், "ஒன்றுபட்ட கை இரண்டாக உடைக்கப்படும், ஒவ்வொன்றும் அதன் சொந்த வழியில் செல்லும்" என்று தெரிவித்துள்ளார். இது நேட்டோ நாடுகள் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அரசியல் பதட்டங்களின் அறிகுறியாக இருக்கும் என பலர் சந்தேகிக்கின்றனர்.

 

டிரம்ப்பின் நடவடிக்கையால் நேட்டோ நாடுகளில் பிளவு ஏற்படும் சூழல் நிலவியது. அதே போல் ஐரோப்பிய ஒன்றியத்திலும், மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் பிளவைக் குறிக்கலாம் என நம்புகின்றனர்.

 

மேலும், "வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் ஒரே நேரத்தில் எழும் இரட்டை நெருப்பு " என குறிப்பிட்டுள்ளார். இது காட்டுத்தீ அல்லது எரிமலை வெடிப்பை குறிப்பிட்டு இருக்கலாம் என கருதுகின்றனர். சிறுகோள் அல்லது விண்கல் பூமியை தாக்கக்கூடும் என்றும் கூறுகின்றனர்.

 

சமீபத்தில் இந்தோனேசியாவில் பெரும் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து ரஷ்யாவில் 600 ஆண்டுகளுக்கு பிறகு கம்சட்கா எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டது.

 

மற்றொரு கணிப்பில், மனிதகுலம் "பெற விரும்பாத" அறிவை நெருங்கும் என்று கூறியுள்ளார். மேலும், "திறக்கப்படுவதை மூட முடியாது" என கணித்துள்ளார்.

 

இது, உயிரி தொழில்நுட்ப முன்னேற்றம், செயற்கை நுண்ணறிவு அல்லது கருந்துளை குறித்த ஆய்வின் முன்னேற்றமாக இருக்கும் என யூகிக்கின்றனர்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்