Paristamil Navigation Paristamil advert login

முக்கிய மருந்து வழங்கலை உறுதி செய்ய கடுமையான புதிய விதிகள்!!

முக்கிய மருந்து வழங்கலை உறுதி செய்ய கடுமையான புதிய விதிகள்!!

5 ஆவணி 2025 செவ்வாய் 17:31 | பார்வைகள் : 2044


மருந்துப்பற்றாக்குறையை தடுக்கும் நோக்கில், பாராசிட்டமால் (Paracétamol), அமொக்ஸிசிலின்ஸ(amoxicilline), இன்சுலின் (insuline) போன்ற முக்கியமான மருந்துகளுக்கான வழங்கலை உறுதி செய்யும் புதிய உத்தரவு Journal officie மூலம் 2025 ஆகஸ்ட் 5ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. 

இனி, மருந்து நிறுவனங்கள் இவ்வகை மருந்துகளின் விற்பனையை நிறுத்த நினைத்தால், மாற்று தீர்வுகள் கிடைக்கும் வரை மருந்து கிடைக்கையைத் தொடர்ந்து உறுதி செய்யும் திட்டத்தை வழங்க வேண்டும். இந்த திட்டம் மற்றும் தாக்கங்களை, தேசிய மருந்து பாதுகாப்பு நிறுவனமான ANSM மதிப்பீடு செய்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

இத்துடன், இவ்வகை மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டால், ANSM இறக்குமதி மற்றும் விநியோக கட்டுப்பாடுகளை அமுல்படுத்தலாம். சுகாதார அமைச்சகம் மருந்தகங்களில் சிறப்பு தயாரிப்புகளை தற்காலிகமாக அனுமதிக்கலாம். 

2024 முடியும்போது, 8,000-க்கும் மேற்பட்ட மருந்துகள் "முக்கிய மருத்துவ விருப்ப மருந்துகள்" பட்டியலில் இருந்தன, மேலும் இவற்றுக்கு குறைந்தது இரண்டு மாத கையிருப்பு கட்டாயம், ஆனால் தொடர்ச்சியான பற்றாக்குறை ஏற்பட்ட மருந்துகளுக்கு நான்கு மாத கையிருப்பு தேவைப்படும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்