Paristamil Navigation Paristamil advert login

சர்க்கரை வள்ளி கிழங்கு பான் கேக்

சர்க்கரை வள்ளி கிழங்கு பான் கேக்

5 ஆவணி 2025 செவ்வாய் 13:41 | பார்வைகள் : 449


சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் அதை காலை உணவாக உட்கொள்வது சிறந்தது. இதனால் வயிறு ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். எடை இழப்புக்கும் சிறந்த உணவு. இப்படி பல நன்மைகள் இருப்பதால் அதில் பான் கேக் செய்து சாப்பிடுவது நல்ல தேர்வாக இருக்கும். குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியவர்களும் சாப்பிடலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சர்க்கரை வள்ளி கிழங்கு - 3
ரவை - 1/2 கப்
சர்க்கரை - 1/4 கப்
பால் - 1/2 கப்
உப்பு - 1 சிட்டிகை

செய்முறை :
சர்க்கரை வள்ளிக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு அதை வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் அதை நன்கு மசித்து அதனுடன் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து பிசைந்துக்கொள்ளுங்கள்.

ஊறிய பின் அடுப்பின் தவா வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் மாவை தோசை போல் அல்லாமல் கெட்டியான பதத்தில் ஊற்றவும்.
பின் சுற்றிலும் நெய் ஊற்றி இரு புறமும் புரட்டி எடுத்தால் பான் கேக் தயார்.

பரிமாறும்போது அதன் மீது தேனை சுற்றிலும் ஊற்றி கொடுங்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்