Paristamil Navigation Paristamil advert login

காந்தாரா 3-ல் ஜூனியர் என்.டி.ஆர்?

காந்தாரா 3-ல் ஜூனியர் என்.டி.ஆர்?

5 ஆவணி 2025 செவ்வாய் 12:41 | பார்வைகள் : 688


ஜூ.என்.டி.ஆர் தற்போது பான் இந்தியா அளவில் பிசியான நடிகராக வலம் வருகிறார். தற்போது வார் 2 படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி உள்ளார். இதில் ஹிரித்திக் ரோஷன் உடன் நடித்துள்ளார். அயன் முகர்ஜி இயக்கிய இந்தப் படத்தை யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதையடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஜூனியர் என்.டி.ஆர். இதற்கு டிராகன் என்ற பெயரை பரிசீலித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 1970களில் வங்காளப் பின்னணியில் நடக்கும் மாஃபியா கதையான, இதில் ஜூ.என்.டி.ஆர் ஒரு கேங்ஸ்டராக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதில் ருக்மிணி வசந்த் நாயகியாகவும், பிருத்விராஜ் சுகுமாரன், டொவினோ தாமஸ், பிஜு மேனன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பதாகத் தெரிகிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது. இதுதவிர தேவரா 2, திரிவிக்ரம் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார் ஜூனியர் என்.டி.ஆர்.

இந்த நிலையில் ஜூனியர் என்.டி.ஆர் காந்தாரா 3ம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. தற்போது ரிஷப் ஷெட்டி, காந்தாரா 2 படத்தை இயக்கி வருகிறார். காந்தாரா: அத்தியாயம் 1 என்ற பெயரில் இந்தப் படம் உருவாகி வருகிறது. இதில் ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்து, இயக்கியும் வருகிறார். காந்தாரா படத்திற்கு இது முன்னோட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. முதல் பாகத்தை விட இரண்டு மடங்கு பிரம்மாண்டமாக இந்தப் படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ஆம் தேதி பான் இந்தியா அளவில் இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.

காந்தாரா 3ம் பாகத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் பரவி வருகின்றன. இந்த மூன்றாம் பாகத்தில் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் ஜூ.என்.டி.ஆரை நடிக்க வைக்க ரிஷப் ஷெட்டி திட்டமிட்டுள்ளாராம். தற்போது இந்த யோசனை ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதாகத் தெரிகிறது. ஜூ.என்.டி.ஆர், ரிஷப் ஷெட்டி இருவரும் நல்ல நண்பர்கள். நீண்ட காலமாக இவர்களுக்கிடையே நட்பு நீடித்து வருகிறது. சமீபத்தில் ஜூ.என்.டி.ஆர் கர்நாடகா சென்றபோது, அங்குள்ள பிரபல கோயில்களை நேரில் அழைத்துச் சென்று காண்பித்தார் ரிஷப் ஷெட்டி. சிறப்பு பூஜைகளையும் செய்து வைத்தார். காந்தாரா 3ல் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க இவர்களின் நட்பு ஒரு முக்கிய காரணமாக அமையும் என்று கூறப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்