Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : குடியிருப்பு கட்டிடத்தில் தீ! - ஒருவர் பலி!

பரிஸ் : குடியிருப்பு கட்டிடத்தில் தீ! - ஒருவர் பலி!

5 ஆவணி 2025 செவ்வாய் 12:05 | பார்வைகள் : 1367


 

குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக ஒருவர் பலியாகியுள்ளார். ஓகஸ்ட் 4, நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

17 ஆம் வட்டாரத்தின் Rue de Lévis வீதியில் உள்ள கட்டிடம் ஒன்று பிற்பகல் 3 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. நான்கு அடுக்குகள் கொண்ட குறித்த கட்டிடத்தின் நான்காவது தளத்தில் தீ பரவியதை அடுத்து, தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர்.

தீக்குள் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தீ ஏற்பட்டமைக்குரிய காரணங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்