கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்.. கவலையளிக்கும் எண்ணிக்கை!!

5 ஆவணி 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 886
பிரான்சில் கொக்கைன் போதைப்பொருளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. எதிர் நடவடிக்கைகள் அதிகரித்துள்ள போதும் கவலையளிக்கும் விதமாக கொக்கைன் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து ஜூன் 1 ஆம் திகதி வரை பிரான்சில் 29.4 தொன் கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டு இதேகாலப்பகுதியோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 56% சதவீதம் அதிகமாகும்.
அதேவேளை, பிரான்சின் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் கொக்கைனின் அளவு அதிகரித்துள்ளன. 2018 ஆம் ஆண்டில் ஒரு கிராம் கொக்கைன் 70 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. பின்னர் 2020 ஆம் ஆண்டில் அது 66 யூரோக்களுக்க்ம், 2024 ஆம் ஆண்டில் 58 யூரோக்களுக்கும் விற்பனை செய்யப்பட்டது. விலை வீழ்ச்சி அதிக பயனாளர்களை ஏற்படுத்துவதாக பிரெஞ்சு போதைப்பொருள் தடுப்பு பிரிவான OFAST அறிவித்துள்ளது.
கொக்கைன் போதைப்பொருள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் நாடாக லத்தீன் அமெரிக்கா உள்ளது. அங்கு சென்ற 2024 ஆம் ஆண்டில் 4.000 தொன் கொக்கைன் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025