தொழில் துறை மாநாடு துவக்கினார் ஸ்டாலின்!

4 ஆவணி 2025 திங்கள் 13:07 | பார்வைகள் : 128
முதலீட்டாளர்களை ஈர்க்க தூத்துக்குடியில் நடந்த தொழில் துறை மாநாட்டில், ரூ.32,554 கோடி முதலீடு செய்வதற்கான 41 புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆகஸ்ட் 04 கையெழுத்தானது.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சாலையில் உள்ள மாணிக்கம் மஹாலில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் அவர் கலந்து கொண்டார். மாநாட்டில் தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இதன் மூலம் 32,444 கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும். 49,845 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், நிகழ்ச்சியின்போது 3,600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 2,530 கோடி ரூபாய் மதிப்பில் 5 புதிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
வாகன உற்பத்தி ஆலை
துாத்துக்குடி மாவட்டம், சில்லாநத்தம் சிப் காட் பகுதியில், வியட்நாம் நாட்டின் வின்பாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட்டது. தூத்துக்குடியில் இன்று (ஆகஸ்ட் 04) ரூ.16,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட கார் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
ஆலையில் முதற்கட்டமாக, ஆண்டுக்கு 50 ஆயிரம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த தொழிற்சாலை திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவில் மின் வாகன உற்பத்தியின் தலைநகர் தமிழகம் தான் என்று நெஞ்சை நிமிர்த்தி நான் சொல்வேன். நாட்டின் ஒட்டுமொத்த மின்சார வாகனங்கள் உற்பத்தியில் 40 சதவீதம் தமிழகத்தில் தான் உற்பத்தி ஆகிறது.
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் ஆலைக்கு நான் அடிக்கல் நாட்டிய 17 மாதங்களில் தமிழகத்தில் நிறுவனத்தை தொடங்கி பெருமை சேர்த்துள்ளார்கள். வியட்நாம் என்றாலே வியப்பு தான். தென் மாவட்டங்கள் தொழில் பகுதியாக உருவாகும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
கையெழுத்திட்டு...!
தூத்துக்குடி வின்பாஸ்ட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் காரில் கையெழுத்திட்டு விற்பனையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025