Paristamil Navigation Paristamil advert login

ஆக., 7ல் விருந்து, 8ல் பேரணி இண்டி கூட்டணி திட்டம்

ஆக., 7ல் விருந்து, 8ல் பேரணி இண்டி கூட்டணி திட்டம்

4 ஆவணி 2025 திங்கள் 09:07 | பார்வைகள் : 136


வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து, வரும் 8ல் தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்கு பேரணி செல்ல 'இண்டி' கூட்டணி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, வரும் 7ல் இரவு விருந்துடன் கூடிய ஆலோசனை கூட்டத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் பல்வேறு வாக்காளர்களை தேர்தல் கமிஷன் நீக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இது தொடர்பாக தற்போது நடைபெறும் பார்லி மழைக்கால கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் கூட்டணியான 'இண்டி' கோரிக்கை விடுத்தது.

ஆனால், அரசியலமைப்பு சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் கமிஷன் போன்ற அமைப்பு குறித்து அவையில் விவாதிக்க முடியாது என்று முன்னாள் சபாநாயகர் பலராம் ஜாக்கர் கூறியதை மேற்கோள் காட்டி, தற்போதைய பார்லி விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு விவாதிக்க அனுமதி மறுத்தார்.

லோக்சபா சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா துணைத் தலைவர் ஆகியோர், இந்த விவகாரத்தை சபையில் விவாதிக்கலாமா என முடிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக விவாதிக்க, இண்டி கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. வரும் 7ல் இரவு விருந்து நடக்கிறது. அதைத் தொடர்ந்து, 8ம் தேதி தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்கு பேரணி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது உட்பட பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்