இந்தோனேசியாவில் 20 கி.மீ உயரத்திற்கு தீ பிழம்பை கக்கிய எரிமலை - விமானங்கள் ரத்து

3 ஆவணி 2025 ஞாயிறு 17:46 | பார்வைகள் : 702
இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் வெவோடோபி நகரில் 1,500 மீட்டர் உயரமுள்ள லிவோட்பி எரிமலை உள்ளது.
லக்கி லக்கி என அழைக்கப்படும் இந்த எரிமலையை காண வெளிநாடுகளில் இருந்து பல்வேறு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
இந்த நிலையில், லக்கி லக்கி எரிமலை அடுத்தது வெடித்து, பெரும் நெருப்பை கக்கியுள்ளது.
எரிமலை வெடித்ததில், 20 கிமீ உயரத்திற்கு தீக்குழம்பு வெளியேறியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை பரவியது.
இதன் காரணமாக, அந்த பகுதியில் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டது. 40க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
மேலும் எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் 8 கி.மீ தூரத்திற்கு ஆறாக ஓடியது. இதனால் எரிமலை அருகே உள்ள கிராமங்களில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
நவம்பர் மாதம் இதே எரிமலையில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.