இலங்கை செல்லும் வௌிநாட்டவர்களுக்கு விமான நிலையத்தில் வாகன சாரதி அனுமதிப்பத்திரம்
3 ஆவணி 2025 ஞாயிறு 16:10 | பார்வைகள் : 1259
இலங்கை செல்லும் வௌிநாட்டவர்களுக்காக விமான நிலையத்தில் தற்காலிக வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று(03) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இது தொடர்பில் விசேட நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
வௌிநாட்டவர்கள் இன்று முதல் வாகன அனுமதிப்பத்திரத்தை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட நிலையத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை வாகன அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள வௌிநாட்டவர்கள் வேரஹெரவில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது.


























Bons Plans
Annuaire
Scan