கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது
3 ஆவணி 2025 ஞாயிறு 08:44 | பார்வைகள் : 1135
8 கிலோ 220 கிராம் குஷ் போதைப்பொருளுடன் இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது ஒரு சந்தேக நபரிடமிருந்து 04 கிலோ 112 கிராம் குஷ் போதைப்பொருளும், மற்றைய சந்தேக நபரிமிருந்து 04 கிலோ 108 கிராம் குஷ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் 38 மற்றும் 47 வயதான இந்தியர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.


























Bons Plans
Annuaire
Scan