Paristamil Navigation Paristamil advert login

காஸாவில் முதன்முறை விமானத்தின் மூலம் நிவாரணப் பொருள்

காஸாவில் முதன்முறை விமானத்தின் மூலம் நிவாரணப் பொருள்

2 ஆவணி 2025 சனி 19:08 | பார்வைகள் : 231


காஸாவில் முதன்முறை விமானத்தின் மூலம் நிவாரணப் பொருள்களைப் பிரான்ஸ் போட்டுள்ளது .

 

மனிதநேய நெருக்கடியைச் சமாளிக்க விமானம் மூலம் உணவுப் பொருள்களை போட்டதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன் (Emmanuel Macron) கூறினார்.

 

அவை மட்டும் போதமாட்டா, காஸா மக்களின் பட்டினியைப் போக்க அங்கே முழுமையாகச் செல்ல இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்றார் அவர்.

 

அதன்படி சுமார் 40 டன் உணவுப் பொருள்களை பிரான்ஸ் காஸாவில் போட்டதாகத் தெரிகிறது.

 

 

அதற்கு உதவிய ஜோர்தான், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு பிரான்ஸ் நன்றி தெரிவித்தது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்