இரண்டாம் உலக போர் பதுங்கு குழியின் அடியில் ஹோட்டல்

2 ஆவணி 2025 சனி 18:08 | பார்வைகள் : 231
சீனாவில் பூமிக்கு அடியில் செயல்பட்டு வரும் உணவகம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சீனாவின் சோங்கிங் நகரில் பூமிக்கு அடியில் செயல்பட்டு வரும் உணவகம் உள்ளது. இரண்டாம் உலக போர் காலகட்டத்தில் பதுங்கு குழியாக பயன்படுத்தப்பட்ட இந்த இடம் தற்போது உணவகமாக மாறியுள்ளது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பும் பகுதியாக மாறியுள்ளது இந்த உணவகம். வெளியில் வெயில் சுட்டெரித்தாலும் பதுங்கு குழியில் செயல்படும் உணவகத்தில் குளிர்ந்த சுழல் நிலவுவது தங்களுக்கு பெரும் நிம்மதியை தருவதாக கூறுகின்றனர் வாடிக்கையாளர்கள்.
சோங்கிங் நகரில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் கொளுத்தும் நிலையில், உணவகத்துக்குள் 77 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் நிலையே நிலவுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அது மட்டுமின்றி குடுப்பதினரின் பிறந்தநாள் விழாவை இந்த உணவகத்திலேயே கொண்டாடி மகிழ்கின்றனர் சோங்கிங் நகர வாசிகள். 520 மீட்டர் நீளம் கொண்ட இந்த உணவகத்தில் வடிக்கையாளர்களுக்காக 280 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சோங்கிங் நகரில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட பதுங்கு குழிகள் உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025