Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவிடம் வடகொரியா விடுத்துள்ள கோரிக்கை

அமெரிக்காவிடம் வடகொரியா விடுத்துள்ள கோரிக்கை

2 ஆவணி 2025 சனி 08:30 | பார்வைகள் : 324


அமெரிக்கா தனது நாட்டை அணு ஆயுத சக்திவாய்ந்த நாடாக அங்கீகரிக்க வேண்டும் என வட கொரிய ஜனாதிபதியின் சகோதரி கோரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

ட்ரம்ப்பின் முதல் ஆட்சிக் காலத்தைப் போல வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிடச் செய்வதற்காக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தால் அதை ஏற்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அமெரிக்கா கடந்த காலத்தை விடுத்து புதிய விடயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

2018‑2019 ஆம் ஆண்டு அன்று நடைபெற்ற ட்ரம்ப்‑கிம் உச்சி மாநாடுகளின் சந்திப்புகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சரியான முறையில் செயல்படாததால், இனி பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடாத்த முயற்சி செய்யும் நிலையில், அமெரிக்கா பின்வரும் நிலைகளை நன்கு புரிந்து கொண்டு கையெழுத்து நீட்சிக்கு வர வேண்டும்.

 

இவற்றைத் தவிர்த்து பழைய நிலையை மீண்டும் முயற்சி செய்வது பொருத்தமல்ல என்றும் அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்