வியட்நாமில் வெள்ளப்பெருக்கு - 14 பேர் உயிரிழப்பு

2 ஆவணி 2025 சனி 08:30 | பார்வைகள் : 184
வியட்நாமின் வடக்கு மாகாணமான டியென் பியெனில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
வியாழக்கிழமை (31) இரவு பல மணி நேரம் பெய்த கடும் மழையினால் வெள்ளப்பெருக்கு வேகமாக அதிகரித்துள்ளது.
தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது, அத்தோடு, மாகாணத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளை ஏற்படுத்தியதாக டியென் போங் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கினால் மாகாணத்தின் பல பகுதிகளுக்கான போக்குவரத்து மற்றும் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
ஹாங் பு ஷி கிராமத்தில் இரண்டு சிறுவர்கள் மண்சரிவில் புதையுண்டுள்ளனர். மீட்புப் பணியாளர்கள் அவர்களின் உடல்களைக் கண்டுபிடிக்கவில்லை.
மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் இடையூறை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025