காஸாவில் மனிதாபிமான உதவிகளை விமானத்தில் இருந்து கொட்டிய பிரான்ஸ்!!

2 ஆவணி 2025 சனி 07:00 | பார்வைகள் : 1621
யுத்த பிடியில் சிக்கியுள்ள காஸா மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை பிரான்ஸ் விமானம் மூலம் வானத்தில் இருந்து வீசியுள்ளது.
விமானம் மூலம் உதவிகளை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டதன் பின்னர், நேற்று ஓகஸ்ட் 1 ஆம் திகதி இந்த உதவிகளை பிரான்ஸ் வழங்கியுள்ளது.
நான்கு விமானங்கள் ஜோர்தானில் இருந்து புறப்பட்டு, காஸாவை நோக்கிச் சென்றன. ஒவ்வொரு விமானமும் 10 தொன் எடையுள்ள உலர் உணவு, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை நேற்று வெள்ளிக்கிழமை வீசிச் சென்றது.
காஸா மக்களுக்கு ஒரு மாதத்துக்கு 62,000 தொன் உணவுகள் தேவை என ஐ.நா கணக்கிட்டுள்ளது. அங்கு இரண்டு மில்லியன் மக்கள் யுத்தப்பிடியில் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.