Paristamil Navigation Paristamil advert login

‘மதராஸி’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக இலங்கைக்கான தென்னிந்திய துணைத் தூதரகத்தில் புகார் !

 ‘மதராஸி’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக இலங்கைக்கான தென்னிந்திய துணைத் தூதரகத்தில் புகார் !

1 ஆவணி 2025 வெள்ளி 13:26 | பார்வைகள் : 268


சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘மதராஸி’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக இலங்கையை சேர்ந்த ஐங்கரன் மீடியா சொல்யூஷன் நிறுவனம் இலங்கைக்கான தென்னிந்திய துணைத் தூதரகத்தில் புகார் அளித்துள்ளது. அந்த புகாருக்கு 3 நாட்களில் பதிலளிக்குமாறு தென்னிந்தியாவிற்கான இலங்கையின் துணைத் தூதரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராசி திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்தை ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீ லட்சுமி மூவிஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மதராஸி திரைப்படத்தின் சில காட்சிகளை இலங்கையில் படமாக்கி உள்ளனர்.

இதற்காக அங்குள்ள கார்த்திக் என்பவரின் ஐயங்கரன் நிறுவனம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அதாவது படக்கு குழுவினர் இங்கிருந்து இலங்கைச் சென்று அங்கு தங்கும் வசதி, படப்பிடிப்பு தளம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இந்த நிறுவனத்தை சேர்ந்த கார்த்தி என்பவர் செய்துள்ளார். அதற்கான செலவு இந்திய மதிப்பின்படி ஒரு கோடியே 75 லட்சம் மதிப்பு என்று கூறப்படுகிறது. அதாவது இலங்கை மதிப்பில் 5 கோடியே 37 லட்சத்து 80 ஆயிரத்து 489 ரூபாய் ஆகிறது.

இந்தத் தொகையை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தங்களுக்கு வழங்கவில்லை என சென்னையில் அமைந்துள்ள தென்னிந்தியாவிற்கான இலங்கை துணை தூதரகத்தில் புகார் அளித்துள்ளார் கார்த்திக். இது குறித்து பல கட்ட பேச்சுவார்த்தை பட நிறுவனத்துடன் பேசியும் அவர்கள் தங்களுக்கு பணத்தை திரும்ப வழங்கவில்லை என்றும் கார்த்தி தரப்பில் கூறுகின்றனர். இதன் காரணமாக தென்னிந்தியாவிற்கான இலங்கையின் துணை தூதரகத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதை அடுத்து இலங்கையின் துணை தூதரகம் சம்பந்தப்பட்ட ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனத்திற்கு மூன்று நாட்களில் இந்த புகார் குறித்து விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் போலவே அவரின் மற்றொரு பட தயாரிப்பு நிறுவனமும் இதே போல் தங்களை ஏமாற்றி இருப்பதாகவும் ஐங்கரன் மீடியா சொல்யூஷன் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்