Paristamil Navigation Paristamil advert login

18ஆவது மாடியிலிருந்து விழுந்தும் உயிர்தப்பிய 3 வயதுச் சிறுவன்!

18ஆவது மாடியிலிருந்து விழுந்தும் உயிர்தப்பிய 3 வயதுச் சிறுவன்!

1 ஆவணி 2025 வெள்ளி 13:09 | பார்வைகள் : 483


சீனாவில் 18 மாடிக் கட்டடத்திலிருந்து விழுந்த 3 வயதுச் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளான். சம்பவம் ஹங்சோவ் (Hangzhou) நகரில் நடந்தது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சிறுவனைத் தாத்தா பாட்டியின் கவனிப்பில் அவனது பெற்றோர் விட்டுச் சென்றிருந்த நிலையில், சிறுவன் உறங்கிவிட்டதாக நம்பித் தாத்தா, பாட்டி இருவரும் கடைக்குச் சென்றனர்.

அப்போது திடீரென்று விழித்துக்கொண்ட சிறுவன் கழிப்பறைக்குச் சென்று அங்கிருந்த சன்னல்மீது ஏறியதால் கட்டடத்திலிருந்து கீழே விழுந்தான்.

சிறுவன் 18ஆவது மாடியிலிருந்து கிழே விழுந்ததைத் தம்மால் முதலில் நம்பமுடியவில்லை என தந்தை கூறியுள்ளார்.

17ஆவது மாடியில் திறந்திருந்த சன்னல்மீது மோதி அதன் பிறகு அருகிலிருந்த மரத்தின்மீது சிறுவன் விழுந்ததால் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அதேவேளை சிறுவன் அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தும் உயிர் பிழைத்தது அதிசயம் என்றனர் மருத்துவர்கள்.

விழுந்ததில் இடது கையில் முறிவு, முதுகுத்தண்டில் சுளுக்கு, உள்ளுறுப்புக் காயங்கள் மட்டுமே சிறுவனுக்கு ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் சிறுவன் மிகவும் அதிர்ஷ்டசாலி; அவன் விரைவில் குணமடைய வேண்டும் என இணையவாசிகள் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்