கோடைகாலத்தில் - நீரில் மூழ்கி 193 பலி!
1 ஆவணி 2025 வெள்ளி 13:02 | பார்வைகள் : 2365
சென்ற வருடத்தின் கோடைகாலத்தோடு ஒப்பிடுகையில், இவ்வருட கோடைகாலத்தில் ‘அதிகமானோர்’ நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜூன் 1 ஆம் திகதியில் இருந்து ஜூலை 23 ஆம் திகதி வரையான நாட்களில் 702 ‘நீரில் மூழ்கிய’ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 193 பேர் பலியாகியுள்ளனர். 2024 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 45% சதவீதத்தால் அதிகமாகும். சென்றவருடத்தின் இதே காலப்பகுதியில் 130 பேர் உயிரிழந்திருந்தனர்.
இவ்வருடத்தில் உயிரிழந்தவர்களில் 27 பேர் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, இவ்வருட கோடைகாலம் நிறைவடைவதற்கு முன்னர் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan