Paristamil Navigation Paristamil advert login

பெற்றோல் ; டீசல் : நான்கு ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றம்!

பெற்றோல் ; டீசல் : நான்கு ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றம்!

1 ஆவணி 2025 வெள்ளி 10:56 | பார்வைகள் : 2345


 

பிரான்சில் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவு பெற்றோல் டீசலின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த வருட கோடை விடுமுறைக்கு சொந்த வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இது அமைந்துள்ளது. ஒரு லிட்டர் டீசலின் விலை  1.6279 யூரோக்களாக உள்ளது. சென்ற வருட ஜூலை மாதத்தில் இதன் விலை 1.7070 யூரோக்களாக இருந்தது. இறுதியாக 2021 ஆம் ஆண்டு டீசலின் விலை 1.4395 யூரோக்களாக இருந்தது. அதன் பின்னர் பதிவாகும் மிகக்குறைந்த விலை இதுவாகும்.  முழு எரிபொருள் தாங்கியையும் 4 யூரோக்கள் குறைவாக நிரப்ப முடியும் எனும் விலை வீழ்ச்சி ஒருவருடத்தில் பதிவாகியுள்ளது.

அதேவேளை  95-E10 ரக பெற்றோலின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது 1.6694 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்படும் பெற்றோல் சென்ற ஆண்டு ஜூலையில் 1.8019 யூரோக்களுக்கு விற்பனையாகியிருந்தது. முழு எரிபொருள் தாங்கியை நிரப்பும்போது சராசரியாக 6.625 யூரோக்கள் சேமிக்க முடியும் எனும் மாற்றம் கடந்த ஓராண்டுகளில் ஏற்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்