மியான்மாரில் அவசரகால நிலை நீக்கம்
1 ஆவணி 2025 வெள்ளி 10:45 | பார்வைகள் : 1236
மியான்மார் இராணுவத்தினால் 2021 பெப்ரவரி முதல் அறிவிக்கப்பட்ட அவசரகால நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்ட தேர்தலுக்குத் தயாராகும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் அரசாங்கத்தை 2021 பெப்ரவரியில் இராணுவம் அகற்றிய பின்னர், அவசரகால நிலையை அறிவித்தது.
இதனால் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
அதன்படி, இராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லைங் சட்டமன்றம், நிர்வாகம், மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் மீது உச்ச அதிகாரத்தைப் பெற்றார்.
இருப்பினும், மின் ஆங் ஹ்லைங் தலைமையில் 11 பேர் கொண்ட தேர்தல் ஆணையத்தை அமைப்பதாக இராணுவ ஆட்சிக்குழு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan