Paristamil Navigation Paristamil advert login

சுவிட்சர்லாந்து புதிதாக திறந்த உணவகம் - உரிமையாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

சுவிட்சர்லாந்து புதிதாக திறந்த உணவகம் - உரிமையாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

2 ஆடி 2025 புதன் 11:27 | பார்வைகள் : 511


சுவிட்சர்லாந்தில் நகரமொன்றில் புதிதாக உணவகம் ஒன்று திறக்கப்பட்ட நிலையில், உணவக உரிமையாளர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

சுவிட்சர்லாந்தின் சூரிக் நகரில் புதிதாக Casi Casa restaurant என்னும் உணவகம் ஒன்றைத் திறந்தது ஒரு குடும்பம்.

இந்நிலையில், வார இறுதி விடுமுறைக்குப் பின் உணவகத்துக்குத் திரும்பிய உணவக உரிமையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

உணவகத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த 30 மேசைகளும் 60 நாற்காலிகளும் மாயமாகியிருந்தன.

இத்தனைக்கும், அந்த உணவகம் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. அந்த மேசை நாற்காலிகள் எல்லாம், சங்கிலிகளால் தரையுடன் இணைக்கப்பட்டிருந்தன.

அதிர்ச்சியடைந்த உணவக உரிமையாளர்கள் பொலிசாருக்கு தகவலளிக்க, பொலிசார் அந்த துணிகர திருடர்களைத் தேடிவருகிறார்கள்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்