வெற்றிமாறன் சிம்பு படத்தில் இணையும் மணிகண்டன்.. ?

1 ஆடி 2025 செவ்வாய் 16:29 | பார்வைகள் : 197
நடிகர் சிம்பு நடிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில், நடிகர் மணிகண்டன் இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும், வெறும் ஐந்து நிமிடம் மட்டுமே தோன்றும் ஒரு கெளரவ தோற்றத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் மணிகண்டன் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும், அவர் கதாநாயகனாக நடித்த 'குட் நைட்', 'லவ்வர்' மற்றும் 'குடும்பஸ்தன்' ஆகிய மூன்று படங்களும் சூப்பர் ஹிட் ஆன நிலையில், ஐந்து நிமிட கதாபாத்திரத்தில் எப்படி நடிக்க ஒப்புக்கொண்டார் என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
இருப்பினும், சிம்பு மற்றும் வெற்றிமாறன் மீது மணிகண்டன் வைத்துள்ள மரியாதையின் அடிப்படையில் தான் இந்த படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் புரமோ வீடியோ இம்மாதம் 2வது வாரத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.