Paristamil Navigation Paristamil advert login

டெஸ்டில் குல்தீப் யாதவ் கண்டிப்பாக விளையாட வேண்டும் -வாசிம் ஜாபர்

டெஸ்டில் குல்தீப் யாதவ் கண்டிப்பாக விளையாட வேண்டும் -வாசிம் ஜாபர்

1 ஆடி 2025 செவ்வாய் 12:45 | பார்வைகள் : 121


இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் குல்தீப் யாதவ் கண்டிப்பாக விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

இப்போட்டிக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்ற சந்தேக எழுந்துள்ளது.

ஏனென்றால், இந்த டெஸ்ட் தொடரில் பணிச்சுமை காரணமாக 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

எனவே பர்மிங்காம் டெஸ்டில் அவர் விளையாடவில்லை என்றால் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.

முதல் டெஸ்டில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் இந்திய அணி ஆடியது.

ஆனால் கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளர் விளையாட வேண்டும் என முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், "முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்த பல வாய்ப்புகளை கிடைத்தன. கேட்ச்களை சரியாக பிடித்து இருந்தால், முடிவில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். தற்போது இந்திய அணி செய்ய வேண்டியதெல்லாம் பதற்றமின்றி, நிறைய மாற்றங்களை கொண்டுவர வேண்டும். ஆனால், இரண்டாவது டெஸ்டில் குல்தீப் கண்டிப்பாக விளையாட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்