காசா போரை நிறுத்துமாறு இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை

1 ஆடி 2025 செவ்வாய் 10:26 | பார்வைகள் : 214
இஸ்ரேலில் கடந்த 20 மாதங்களாக நீடித்து வரும் காசா போருக்கு இனி பயனில்லை என்றும், அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இஸ்ரேலின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் யெயர் லப்பிட் வலியுறுத்தியுள்ளார்.
தனது பாராளுமன்ற குழுவினருடனான கூட்டத்தில் பேசிய லப்பிட், “காசா போரை தொடர்வதால் இஸ்ரேலுக்குப் பாதுகாப்பு, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக மட்டும் தான் சேதம் ஏற்படுகிறது என தெரிவித்துள்ளார்.
இப்போது இந்த போர் தொடரும் விதமாக எந்த நன்மையும் இல்லை” என சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேல் இராணுவத்தின் தலைமைத் தளபதி ஐயால் சமீர், நேற்று அமைச்சரவையில் பங்கேற்றபோது, ‘அடுத்த கட்ட இலக்கை அரசியல் மட்டம் தீர்மானிக்க வேண்டும்’ என தெரிவித்தார்.
இதன் பொருள், காசாவில் இராணுவத்துக்கென இனி நோக்கங்கள் எதுவும் இல்லை என்பதேயாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
தனது கட்சியின் நிலைப்பாடு தற்போது இராணுவத்தின் நிலைப்பாட்டோடும் ஒத்துப்போகிறது என லப்பிட், குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேலின் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவின் மீது, போரை நிறுத்த வேண்டும் என்ற அழுத்தம் நாடாளுமன்றத்தினுள்ளும், பொதுமக்கள் மத்திலும் அதிகரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.