அமெரிக்காவில் தீயணைப்பு வீரர்கள் மீது துப்பாக்கி சூடு

1 ஆடி 2025 செவ்வாய் 09:26 | பார்வைகள் : 179
அமெரிக்காவில் இடாஹோவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட இரண்டு தீயணைப்பு வீரர்கள் அதிக சக்தி வாய்ந்த துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந் நாட்டு நேரப்படி நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் (19:30 GMT) கோயூர் டி’அலீன் நகருக்கு வடக்கே உள்ள கேன்ஃபீல்ட் மலையில் ஏற்பட்ட தீ விபத்துக்கு குழுவினர் பதிலளிக்கும் போது இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்களா என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் பொதுமக்கள் அந்தப் பகுதியை விட்டு விலகி இருக்குமாறும் வலியுறுத்தினார்.