பாலஸ்தீனியர்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு

1 ஆடி 2025 செவ்வாய் 07:35 | பார்வைகள் : 102
காசாவின் வடக்கு பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அழைப்பை விடுத்துள்ளார்.
இந்தநிலையில், கடந்த 24 மணிநேரத்தில் காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 80 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் 400 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ஹமாஸ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, இஸ்ரேலின் தாக்குதல்களின் முன்னேற்றம் குறித்து அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கலந்துரையாடியிருந்தார்.