Paristamil Navigation Paristamil advert login

சூடானில் தங்க சுரங்கம் இடிந்து விபத்து - 11 பேர் பலி!

சூடானில் தங்க சுரங்கம் இடிந்து விபத்து - 11 பேர் பலி!

30 ஆனி 2025 திங்கள் 22:35 | பார்வைகள் : 183


சூடானில் உள்நாட்டு போர் நீடித்து வருகிறது.

சூடானில் இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்கும் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

அதேவேளை, சூடானில் பல்வேறு தங்க சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

இராணுவம், துணை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலும், சட்ட விரோதமாகவும் செயல்பட்டு வரும் தங்க சுரங்கங்களில் இருந்து தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் இராணுவம் கட்டுப்பாட்டில் உள்ள ரெட் சி மாகாணத்தின் ஹவ்ஈத் பகுதியில் தங்க சுரங்கம் அமைந்துள்ளது, இந்த சுரங்கத்தில் நேற்று தொழிலாளர்கள் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சுரங்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்