Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் ! உக்ரைன் F-16 போர் விமானி பலி

உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் ! உக்ரைன் F-16 போர் விமானி பலி

30 ஆனி 2025 திங்கள் 09:18 | பார்வைகள் : 2116


உக்ரைன் மீது 477 ட்ரோன்கள் மற்றும் 60 ஏவுகணைகளைக் கொண்டு ரஸ்யா 29-06-2025 மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் குறைந்தது ஆறு மாகாணங்களில் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் உள்கட்டமைப்புகள் மற்றும் தொழில்துறை தளங்கள் சேதமடைந்துள்ளன.

லிவிவ், பொல்டாவா, மைக்கோலாய்வ், டினிப்ரோபெட்ரோவ்ஸ்க், செர்காசி மற்றும் இவானோ-ஃபிராங்கிவ்ஸ்க் ஆகிய நகரங்களில் வான்வழித் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

வீடுகள், செர்காசியில், பல மாடி கட்டடங்கள் மற்றும் ஒரு கல்லூரி சேதமடைந்ததில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதலை முறியடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அவர், ஏழு வான் இலக்குகளைச் சுட்டு வீழ்த்தியதாகவும், கடைசி இலக்கைச் சுடும் போது அவரது விமானம் சேதமடைந்து விழுந்து நொறுங்கியதாகவும் உக்ரைனிய விமானப்படை தெரிவித்துள்ளது.

உக்ரேனிய படைகள் 211 ட்ரோன்கள் மற்றும் 38 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்தன.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, இந்தத் தாக்குதலுக்குப் பிறகு உக்ரைனின் வான் பாதுகாப்பை பலப்படுத்த மேற்குலக நாடுகளின் கூடுதல் ஆதரவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

 

 

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்