பழைய மொபைல், லாப்டாப்களில் இருந்து தங்கத்தை பிரித்தெடுக்கும் புதிய முறை கண்டுபிடிப்பு
29 ஆனி 2025 ஞாயிறு 12:28 | பார்வைகள் : 4358
பழைய மொபைல், லாப்டாப்புகளில் இருந்து தங்கம் எளிதில் பிரிக்க புதிய முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஈ-வேஸ்ட் என்றழைக்கப்படும் மின்னணு கழிவுகள் உலகம் முழுவதும் அதிவேகமாகக் கூடிக்கொண்டு வருகின்றன.
ஐக்கிய நாடுகளின் Global E-waste Monitor 2022 அறிக்கையின்படி, அந்த ஆண்டு மட்டும் 62 மில்லியன் டன் மின்னணு கழிவுகள் உருவானதாக கூறப்படுகிறது. இதில் உள்ள பெறுமதியான தனிமங்கள் வீணாகின்றன.
இந்நிலையில், விஞ்ஞானிகள் பழைய மொபைல், லாப்டாப் உள்ளிட்ட சாதனங்களில் இருந்து தங்கத்தை பாதுகாப்பாகவும் சுற்றுச்சூழல் பாதிப்பின்றியும் பிரிக்கக்கூடிய புதிய முறையை Nature Sustainability இதழில் வெளியிட்டுள்ளனர்.
புதிய முறையின் முக்கிய அம்சங்கள்:
படி 1 - தங்கத்தை கரைத்தல்
Trichloroisocyanuric acid பயன்படுத்தி, தங்கத்தை மின்னணு சாதனங்களில் இருந்து கரைத்தெடுக்கப்படுகிறது. இதில் halide catalyst தங்கத்தை Oxidize செய்ய உதவுகிறது.
படி 2 - தங்கத்தை பிடித்தல்
சிறப்பாக உருவாக்கப்பட்ட polysulfide polymer என்ற பொருள் கரைத்த தங்கத்துடன் பிணைந்து அதை தனிப்படுத்துகிறது.
படி 3 - தங்க மீட்பு
பின்னர் அதை கைப்பற்றிய பாலிமரை pyrolyzing அல்லது depolymerizing செய்வதன் மூலம் உயர் தூய்மையில் தங்கம் மீட்கப்படுகிறது.
இம்முறை, இயற்கை சுரங்கங்களில் இருந்தும், பழைய சாதனங்களிலும் வெற்றிகரமாக செயல்படுகிறது. இது சயனைடு, மர்மரிக் அமிலம் போன்ற ஆபத்தான ரசாயனங்களை தவிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பு, மின்னணு கழிவுகளை ‘தங்கக் குகைகளாக’ மாற்றும் வகையில் உள்ளது. உலகளவில் responsible recycling மற்றும் வள மீட்புக்கு இது ஒரு பாரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan