கிழக்கு உக்ரைனில்ல் 110,000 வீரர்களை குவித்த ரஷ்யா
29 ஆனி 2025 ஞாயிறு 12:28 | பார்வைகள் : 4612
கிழக்கு உக்ரைனில் அமைந்துள்ள அதி முக்கியத்துவம் வாய்ந்த Pokrovsk பகுதியில் 110,000 வீரர்களை ரஷ்யா குவித்துள்ளதாக உக்ரைன் இராணுவத் தலைவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு உக்ரைனை மொத்தமாகக் கைப்பற்றுவதே தமது இலக்கு என்பதை உறுதி செய்யும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தற்போது Pokrovsk பகுதியை குறிவைத்துள்ளார்.
ஏற்கனவே கிழக்கு உக்ரைனில் Donetsk மற்றும் Luhansk பிராந்தியங்களின் பெரும்பகுதியை ரஷ்ய இராணுவம் கைப்பற்றியுள்ளது. தற்போதைய முன்னேற்றம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் இராணுவத் தலைவர் Oleksandr Syrskyi,
உக்ரைனின் கிழக்கில் Pokrovsk பகுதியைச் சுற்றியுள்ள 1,200 கிலோமீற்றர் (745 மைல்) போர் முனை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் Pokrovsk நகரம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றல்ல. ஆனால் இந்தப் பகுதி மற்ற இராணுவ மையங்களுடன் இணைக்கும் ஒரு முக்கிய விநியோகச் சாலை மற்றும் இரயில் பாதையில் அமைந்துள்ளது.
உக்ரைனின் Kostiantynivka, Kramatorsk மற்றும் Sloviansk நகரங்களுடன் Pokrovsk பகுதியும் உக்ரைனின் கட்டுப்பாட்டில் இன்னும் இருக்கும் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரேனிய பாதுகாப்பின் முதுகெலும்பாக உள்ளது.
மட்டுமின்றி, உக்ரைனில் தற்போது செயல்படும் ஒரேயொரு நிலக்கரி சுரங்கமும் Pokrovsk பகுதியில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு உக்ரைனின் உக்கிரத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், Pokrovsk பகுதியில் இருந்து ரஷ்யா வெளியேறியது.
போருக்கு முன்னர் Pokrovsk பகுதியில் சுமார் 60,000 மக்கள் குடியிருந்து வந்தனர். ஆனால் பெரும்பாலான மக்கள் தற்போது வேறு பகுதிகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan