உக்ரைன் நகரில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல் - 2 பேர் பலி

28 ஆனி 2025 சனி 20:14 | பார்வைகள் : 1025
உக்ரைனின் தெற்கு நகரில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
தெற்கு உக்ரைன் நகரமான ஒடேசாவில் ரஷ்யா இரவுநேர ட்ரோன் தாக்குதலை நடத்தியது.
மூன்று ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவால் தொடங்கப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா இந்த ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது.
இந்த தாக்குதலில் குடியிருப்பு பகுதி சேதமடைந்த நிலையில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.
ஒடேசா ஆளுநர் ஓலே கிப்பர், "ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது விரோதமான ட்ரோன் தாக்குதலின் விளைவாக இறந்த இரண்டு பேரின் உடல்களை மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் இருந்து மீட்டனர்" என டெலிகிராமில் தெரிவித்தார். மேலும், காயமடைந்த 14 பேரில் மூன்று பேர் குழந்தைகள் என அவர் குறிப்பிட்டார்.
இந்த தாக்குதலில் தனித்தனியாக, கெர்சன் பிராந்தியத்தில் உள்ள அதிகாரிகள் கடந்த நாளில் ரஷ்ய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மூவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெர்சன் ஆளுநர் Oleksandr Prokudin, "ரஷ்ய துருப்புக்கள் பிராந்தியத்தில் உள்ள முக்கியமான மற்றும் சமூக உள்கட்டமைப்பு மற்றும் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்தன" என்றார்.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1