Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

அமேசான் நிறுவனரின் பிரம்மாண்டமான திருமணம்

அமேசான் நிறுவனரின் பிரம்மாண்டமான திருமணம்

28 ஆனி 2025 சனி 19:14 | பார்வைகள் : 3923


அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ், பிரபல ஊடகவியலாளரும் எழுத்தாளருமான லாரன் சான்ச்செஸ் என்னும் பெண்ணை நேற்று, அதாவது ஜூன் மாதம் 27ஆம் திகதி திருமணம் செய்துகொண்டார்.

லாரனுக்கு ஏற்கனவே முந்தைய உறவுகள் மூலம் மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.

2001ஆம் ஆண்டு, Tony Gonzalez என்பவருக்கும் லாரனுக்கும் ஒரு மகன் பிறந்தான். அதுதான் லாரனுடைய முதல் மகன்.  

2005ஆம் ஆண்டு, Patrick Whitesell என்னும் ஹாலிவுட் ஏஜண்டை மணந்தார் லாரன். அவர்கள் இருவருக்கும் 2006ஆம் ஆண்டு ஒரு மகனும், 2008ஆம் ஆண்டு ஒரு மகளும் பிறந்தார்கள்.

இந்நிலையில், கோடீஸ்வரரான ஜெஃப் பெசோஸை சந்தித்தார் லாரன். இருவருக்கும் இடையே தவறான உறவு ஏற்பட, இருவரும் தத்தம் துணையை விவாகரத்து செய்தார்கள்.

2023ஆம் ஆண்டு லாரனுக்கும் ஜெஃப் பெசோஸுக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், நேற்று இருவருக்கும் வெனிஸ் நகரில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது.

திருமணமானதும், தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் தனது பெயரை லாரன் சான்ச்செஸ் பெசோஸ் என மாற்றிக்கொண்டுள்ளார் லாரன்.    

அத்துடன், இதற்கு முன் பதிவேற்றம் செய்திருந்த படங்கள், நிகழ்வுகள் அனைத்தையும் லாரன்நீக்கிவிட்டார் .

வர்த்தக‌ விளம்பரங்கள்