அஜித்துடன் மீண்டும் இணையும் இயக்குனர்..
28 ஆனி 2025 சனி 16:05 | பார்வைகள் : 1240
அஜித் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் சரண், சுமார் 15 வருடங்கள் கழித்து மீண்டும் அஜித் படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் ‘ஏகெ 64’ படத்தை முடித்தவுடன் இந்த படம் தொடங்கும் என்று கூறப்படுவது, திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஜித்தின் 'காதல் மன்னன்' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சரண். அதன் பிறகு, அஜித்தின் 'அமர்க்களம்', 'அட்டகாசம்' ஆகிய படங்களை இயக்கிய அவர், 2010 ஆம் ஆண்டு 'அசல்' என்ற படத்தை இயக்கினார்.இந்த நிலையில் கிட்டத்தட்ட 15 வருட இடைவெளிக்கு பிறகு, மீண்டும் அஜித் படத்தை இயக்கவிருப்பது கோலிவுட்டில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'ஏகே 64' படத்திற்கு பிறகு, இந்தப்படம் 'ஏகே 65' படமாக உருவாகும் என்று கூறப்படுகிறது. சரண் சொன்ன கதை அஜித்துக்கு பிடித்ததாகவும், "கண்டிப்பாக உங்களுக்கு அடுத்த படத்தை செய்கிறேன்" என்று அஜித் வாக்குறுதி அளித்திருப்பதாகவும் தெரிகிறது. இதனையடுத்து, சரண் திரைக்கதையை தயார் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் சரண் கடைசியாக 2019 ஆம் ஆண்டு 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' என்ற படத்தை இயக்கினார். பிக் பாஸ் ஆரவ் நடித்த இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில், தற்போது அஜித்துடன் மீண்டும் இணைந்துள்ள இந்த வாய்ப்பு, சரணுக்கு கோலிவுட்டில் மீண்டும் ஒரு ரவுண்டு வர உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan