Paristamil Navigation Paristamil advert login

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சாலை விபத்தில் அரசு ஊழியர்கள் - 7 பேர் பரிதாப பலி

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சாலை விபத்தில் அரசு ஊழியர்கள் - 7 பேர் பரிதாப பலி

28 ஆனி 2025 சனி 06:53 | பார்வைகள் : 685


மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள நீக்ரோஸ் ஆக்சிடென்டல் மாகாணத்தின் மரம் நடும் நிகழ்வில் கலந்துகொண்டு மினி டெம்போ லாரியில் திரும்பி சென்று கொண்டிருந்த 7 உள்ளூர் அரசாங்க ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிலாய் நகர அரசாங்கத்தின் அனைத்து ஊழியர்களும், சுற்றுச்சூழல் நடவடிக்கையாக மரம் நடும் நிகழ்வில் கலந்துகொண்டு மினி டெம்போ லாரியில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

லாரியானது பரங்கே குய்ம்பலானில் உள்ள ஒரு கான்கிரீட் சாலையில் சென்றுகொண்டிருந்தது.

அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக வாகனத்தின் ஸ்டீயரிங் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததாகத் தெரிகிறது.

இதனால் லாரி சாலையில் கவிழ்ந்தது.

இதில் எதிர்பாராதவிமாக 7 உள்ளூர் அரசாங்க ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் 5 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்