Paristamil Navigation Paristamil advert login

அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு எப்போது ?

அஜித்தின் அடுத்த பட  அறிவிப்பு எப்போது ?

27 ஆனி 2025 வெள்ளி 15:53 | பார்வைகள் : 712


அஜித்தின் 64வது படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா தன்னுடைய எக்ஸ் பக்கத்தின் பயோவில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து, இன்னும் ஒரு சில நாட்களில் அல்லது வாரங்களில் அஜித்தின் 64வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்பது தெரியவந்துள்ளது.

இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் திரைக்கதை எழுதும் பணியில் ஆதிக் ரவிச்சந்திரன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, அஜித் மொட்டை தலையுடன் இருக்கும் கெட்டப் குறித்த புகைப்படம் வெளியான நிலையில், இதுதான் அஜித்தின் அடுத்த பட கெட்டப்பாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்