உலக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சியில் வட கொரியா
27 ஆனி 2025 வெள்ளி 13:58 | பார்வைகள் : 5414
வட கொரியா, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில், ஒரு பிரம்மாண்டமான கடற்கரை ஓய்வு விடுதியை அமைத்துள்ளது.
வொன்சன் கல்மா (Wonsan Kalma) எனப்படும் இந்த சுற்றுலா பகுதியை, வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் "பெரும் திருப்தியுடன்" திறந்து வைத்துள்ளார் என அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) தெரிவித்துள்ளது.
கிம் ஜாங் உன் இந்த இடத்தை ஆய்வு செய்த போது, இதன் கட்டுமானப் பணிகளை "இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று" என்று குறிப்பிட்டார்.

இந்த ஓய்வு விடுதியை கிம் ஜாங் உன் தனது மகள் கிம் ஜு அய் மற்றும் மனைவி ரி சோல் ஜு ஆகியோருடன் இணைந்து திறந்து வைத்தார்.
வட கொரிய தலைவர் தனது நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்த மறைக்கப்பட்ட நாட்டை ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
வட கொரியா மேலும் பல பெரிய சுற்றுலாத் தலங்களை மற்ற இடங்களிலும் அமைப்பதற்கான திட்டங்களை உறுதிப்படுத்தும் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது வட கொரியாவின் சுற்றுலாத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கலாம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1

திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

Ajouter
Annuaire
Scan