விக்கெட் கீப்பராக தோனியின் 18 வருட சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்
25 ஆனி 2025 புதன் 16:44 | பார்வைகள் : 1608
தோனியின் 18 வருட சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில், 5 சதங்கள் அடித்தும், தோல்வியை தழுவியது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனையாக மாறியுள்ளது.
இதில், இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட், இரு இன்னிங்ஸிலும் சதமடித்து பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளார்.
இதன் மூலம், 801 புள்ளிகள் பெற்று, ஐசிசியின் டெஸ்ட் போட்டிக்கான துடுப்பாட்டகாரர் தரவரிசையில் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் ரிஷப் பண்ட்.
டெஸ்ட் வரலாற்றில், 800 மதிப்பீட்டு புள்ளிகளைப் பெற்ற முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார்.
முன்னதாக 2008 ஆம் ஆண்டு தோனி, 662 புள்ளிகள் பெற்றதே அதிகபட்சமாக இருந்தது. தற்போது ரிஷப் பண்ட் இந்த சாதனையை முறியடித்துள்ளார்.
இங்கிலாந்தின் ஜோ ரூட் அதே முதலிடத்தில் தொடர்கிறார். இந்தியா தரப்பில், ஜெய்ஸ்வால், சுப்மன் கில் 20வது இடத்திலும் உள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan