Paristamil Navigation Paristamil advert login

'தக்லைஃப்' தோல்விக்கு காரணம் இதுவா ?

'தக்லைஃப்' தோல்விக்கு காரணம் இதுவா ?

24 ஆனி 2025 செவ்வாய் 18:06 | பார்வைகள் : 1830


உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’தக்லைஃப்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், படத்தின் தோல்விக்கான காரணத்தை இயக்குநர் மணிரத்னம் வெளிப்படையாக கூறி, ரசிகர்களிடம் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

’தக்லைஃப்’ படத்தின் தோல்வி குறித்து மணிரத்னம் பேசுகையில், "எங்களிடமிருந்து மற்றொரு 'நாயகன்' படத்தை எதிர்பார்த்தவர்களுக்கு, நாங்கள் வருந்துகிறோம் என்பதை மட்டுமே எங்களால் சொல்ல முடியும். மீண்டும் 'நாயகன்' பாணியில் படம் எடுக்கும் எண்ணம் எங்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை.

முற்றிலும் மாறுபட்ட ஒரு படைப்பைத்தான் நாங்கள் உருவாக்க விரும்பினோம். ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்பு காரணமாக, நாங்கள் கொடுத்த வேறுபட்ட படம் அவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் கொடுத்த படத்திலிருந்து வெகுதூரம் விலகி, வேறொன்றை தான் பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர். அதனால்தான் ’தக்லைஃப்’ திரைப்படம் தோல்வியடைந்தது," என்று குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இணைவதால், மற்றொரு 'நாயகன்' படம் போல் வரும் என்றுதான் பல ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் வேறொரு களத்தில் படம் இருந்ததால்தான் இந்த படம் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்