இரு இன்னிங்ஸிலும் சதம் - சங்கக்காரவின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்
24 ஆனி 2025 செவ்வாய் 22:44 | பார்வைகள் : 1537
சங்கக்காரவின் 10 வருட சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி, இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில், ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய மூவரும் சதமடிக்க, 471 ஓட்டங்கள் என்ற இலக்கை இந்திய அணி எட்டியது.
தொடர்ந்து முதல் இன்னிங்க்ஸை ஆடிய இங்கிலாந்து, 465 ஓட்டங்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட்டின் சதத்தால் இந்திய அணி 364 ஓட்டங்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இன்றைய கடைசி நாள் போட்டியில், 350 என்ற வெற்றி இலக்கு இலங்கை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித்ததன் மூலம், பல்வேறு சாதனைகளை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.
இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர், 2வது சர்வதேச விக்கெட் கீப்பர் போன்ற சாதனைகளை படைத்துள்ளார்.
அதே போல் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து, 252 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம், ஒரே டெஸ்டில் விக்கெட் கீப்பராக அதிக ஓட்டங்கள் எடுத்த ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
முன்னதாக ,2014 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், இலங்கை விக்கெட் கீப்பர் குமார் சங்ககரா இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 244 (230 &14) எடுத்ததே சாதனையாக இருந்தது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan