Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க பிரஜைகளுக்கு அரசாங்கம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

அமெரிக்க பிரஜைகளுக்கு அரசாங்கம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

23 ஆனி 2025 திங்கள் 14:59 | பார்வைகள் : 2861


உலகெங்கிலும் உள்ள அமெரிக்க பிரஜைகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தும் உலகளாவிய பாதுகாப்பு எச்சரிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.


மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் அல்லது வசிக்கும் அமெரிக்கர்களின் பாதுகாப்பு கடுமையான ஆபத்தில் இருக்கக்கூடும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை "உலகளாவிய எச்சரிக்கையை" வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல்களின் விளைவாக மத்திய கிழக்கு முழுவதும் பயணம் தடைபட்டுள்ளதாகவும், வான்வெளி அவ்வப்போது மூடப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறையின் பாதுகாப்பு எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க குடிமக்களுக்கு எதிராக போராட்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி, உலகெங்கிலும் உள்ள அமெரிக்க குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்