இங்கிலாந்தை விட 96 ஓட்டங்கள் முன்னிலையில் இந்தியா
23 ஆனி 2025 திங்கள் 13:59 | பார்வைகள் : 1967
லீட்ஸ், ஹெடிங்லே விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 90 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதற்கு அமைய இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் மீதம் இருக்க இங்கிலாந்தை விட 96 ஓட்டங்களால் இந்தியா முன்னிலையில் இருக்கிறது.
முதல் இன்னிங்ஸில் அபார சதம் குவித்த யஷஸ்வி ஜய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்ஸில் 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (16 - 1 விக்.)
தொடர்ந்து கே. எல். ராகுல், சாய் சுதர்சன் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சாய் சுதர்சன் 30 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
கே.எல். ராகுல் 47 ஓட்டங்களுடனும் ஷுப்மான் கில் 6 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
முன்னதாக போட்டியின் மூன்றாம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை தனது முதல் இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 209 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 465 ஓட்டங்களைப் பெற்றது.
இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவடையும் தருவாயில் தனது சதத்தைப் பூர்த்தி செய்த ஒல்லி போப், இன்று காலை நீண்ட நேரம் களத்தில் இருக்கவில்லை.
தனது மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 6 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற ஒல்லி போப் 106 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து ஹெரி ப்றூக், அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் 20 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அதன் பின்னர் ஹெரி ப்றூக், ஜெமி ஸ்மித் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
ஜெமி ஸ்மித் 40 ஓட்டங்களைப் பெற்று களம்விட்டகன்றார்.
மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த ஹெரி ப்றூக் 99 ஓட்டங்கள் பெற்ற நிலையில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டம் இழந்தார்.
மத்திய, பின்வரிசையில் க்றிஸ் வோக்ஸ் 38 ஓட்டங்களையும் ப்றைடன் கார்ஸ் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.
இரண்டாம் நாளன்று பென் டக்கெட் 62 ஓட்டங்களைப் பெற்றார்.
இங்கிலாந்தின் மொத்த எண்ணிக்கையில் உதிரிகளாக 34 ஓட்டங்கள் இருந்தது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan