2026 T20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற கனடா - மற்ற 7 அணிகள் எவை?
23 ஆனி 2025 திங்கள் 12:59 | பார்வைகள் : 1930
2026 T20 உலகக்கோப்பைக்கு கனடா தகுதி பெற்றுள்ளது.
20 அணிகள் பங்கு பெற உள்ள 2026 T20 உலகக்கோப்பை கிரிக்கெட், இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற உள்ளது.
தொடரை நடத்தும் அணிகள் என்பதால், இந்தியா மற்றும் இலங்கை மற்றும் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
மேலும், அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளும் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன.
இதில் அமெரிக்க மண்டலத்துக்கான தகுதி சுற்று போட்டிகள் கனடாவின் ஆன்டாரியோ நகரில் நடைபெற்று வந்தது.
இதில் கனடா மற்றும் பஹாமாஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், முதலில் துடுப்பாட்டம் ஆடிய பஹாமாஸ் அணி, 57 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
தொடர்ந்து 58 என்ற இலக்குடன் களமிறங்கிய கனடா அணி, 5.3 ஓவர்களில் 61 ஓட்டங்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம், 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று, 13 வது அணியாக கனடாவும் 2026 T20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.
மேலும், ஐரோப்பா தகுதிச் சுற்றுப் போட்டியில் இருந்து 2 அணிகளும், ஆப்பிரிக்க தகுதிச் சுற்றுப் போட்டியில் இருந்து 2 அணிகளும், ஆசியா-EAP தகுதிச் சுற்றுப் போட்டியில் இருந்து 3 அணிகளும் உலககோப்பைக்கு தகுதி பெரும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan