Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் கட்டுப்பாடின்றி பரவும் தட்டம்மைநோய்

கனடாவில் கட்டுப்பாடின்றி பரவும் தட்டம்மைநோய்

23 ஆனி 2025 திங்கள் 11:59 | பார்வைகள் : 1994


கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் தட்டம்மை தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 1,000த்தை தாண்டிவிட்ட நிலையில், தொற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள், நிலைமை கைமீறிப்போய்விட்டதாக எச்சரித்துள்ளார்கள்.

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் மண்ணன், தட்டம்மை அல்லது மணல்வாரி (measles) என்னும் வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது.

மார்ச் மாதம் துவங்கி, இதுவரை 1,020 பேருக்கு தட்டம்மைத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எட்மண்டனிலுள்ள Stollery சிறார் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான தொற்றுநோய் சிகிச்சை மருத்துவராக பணியாற்றிவரும் Dr. கரினா (Dr. Karina Top), நாம் ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும், சில மரணங்களையும் பார்க்கபோகிறோம் என எச்சரிக்கிறார்.

கடந்த மாதத்தில் தட்டம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ள நிலைமையில், நிலைமை கைமீறிப்போய்விட்டது என்கிறார்.

ஆகவே, ஆல்பர்ட்டா மாகாணத்தில் தடுப்பூசி பெறாத பிள்ளைகள் உடனடியாக தடுப்பூசி பெறுவதை உறுதி செய்துகொள்ளுமாறு மருத்துவர்கள் பெற்றோரை வலியுறுத்திவருகிறார்கள்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்