சிரியா தேவாலயத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 22 பேர் உயிரிழப்பு
23 ஆனி 2025 திங்கள் 09:59 | பார்வைகள் : 2328
சிரியா தேவாலயத்தில், தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் டுவைலாவில் மார் எலியாஸ் என்ற தேவாலயம் உள்ளது.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று, இந்த தேவாலயத்தில் ஏராளமானவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றுள்ளது.
350 பேர் தேவாலயத்தில் இருந்த நிலையில், உள்ளே புகுந்த நபர், துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை தாக்க முயன்ற போது, உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தார்.
இதில், 22 பேர் உயிரிழந்ததோடு, 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிரியாவின் ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கலாம் என சிரியா உள்துறை அமைச்சகம் கருதுகிறது.
சிரியா அதிபர் அஹ்மத் அல்-ஷாராஅங்குள்ள சிறுபான்மையினருடன் இணக்கமாக முயற்சித்து வரும் நிலையில், இந்த தாக்குதல் நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan