வெதுவெதுப்பான நீரை காலையில் பருகுவதால் இவ்வளவு நன்மைகளா?
10 கார்த்திகை 2022 வியாழன் 07:41 | பார்வைகள் : 8400
ஒரு கப் சூடான தேநீர் அல்லது கோப்பியுடன் தங்கள் காலைப் பொழுதை தொடங்குவதற்கு பலரும் பழகிவிட்டனர். சிலர் தாகத்தை தணிக்க குளிர்ந்த நீரை பருகுவார்கள்.
ஆனால் உடல் நலத்தை சீராக பராமரிப்பதற்கு இவற்றை வெறும் வயிற்றில் உட்கொள்வதை தவிர்ப்பதே நல்லது. ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரை காலையில் பருகுவதுதான் சிறப்பானது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
காலையில் வெதுவெதுப்பான நீரை பருகுவது, உணவுக் குழாயில் முந்தைய நாள் முழுவதும் உட்கொள்ளப்பட்ட உணவுகளின் அனைத்து எச்சங்களையும் அகற்ற உதவும். அத்துடன் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும் வழிவகுக்கும். எண்ணெய்யில் பொரிக்கப்படும் உணவு வகைகளை சாப்பிட்டிருந்தால் செரிமான செயல்முறையை எளிதாக்கும். செரிமானத்தையும் மேம்படுத்தும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகுவதுஇ பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி போன்றவற்றின் செயல்பாட்டுக்கு நன்மை பயக்கும். இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த பெரிதும் உதவுபவை.
வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சை சாற்றை கலந்து வெறும் வயிற்றில் உட்கொள்வது உடல் அவற்றை விரைவாக உறிஞ்சுவதற்கும் உதவும். சரும செல்களை பாதுகாக்கும் உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பது ஆரோக்கியமான சருமத்திற்கு அவசியமானதாகும்.
வெதுவெதுப்பான நீர், உடலுக்கு போதுமான நீர்ச்சத்தை தக்கவைக்கக்கூடியது. உடலில் நச்சுக்கள் வெளியேறாமல் இருப்பதால் தான் எளிதில் நோய்வாய்ப்படுவது, விரைவில் வயதான தோற்றத்திற்கு மாறுவது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீர் நச்சுத்தன்மையை வெளியேற்றுவதோடு மட்டுமல்லாமல், சரும செல்களை சரிசெய்யவும் உதவும் என ஆய்வில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan