Paristamil Navigation Paristamil advert login

பொஸ்பரஸ் குண்டு வெடிப்பு - 12 பேர் காயம்!!

பொஸ்பரஸ் குண்டு வெடிப்பு - 12 பேர் காயம்!!

16 ஆடி 2025 புதன் 19:01 | பார்வைகள் : 668


 

பிரான்சின் வடக்கு பகுதியான பா-து-கலே மாவட்டத்தில் உள்ள நகரம் ஒன்ற்ல் பொஸ்பரஸ் குண்டு வெடித்ததில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று ஜுலை 15, செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் Bucquoy   நகரில் இடம்பெற்றதாக அறியமுடிகிறது. நண்பகல் வேளையில் அங்கு விவசாயப்பணிகள் இடம்பெற்றபோது நச்சு எரிவாயு நிரப்பப்பட்ட பொஸ்பரஸ் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அதில் இருந்து பொஸ்பரஸ் வாயு வெளியேறி 12 பேர் காயமடைந்தனர். மூச்சுத்திணறல். உடல் எரிவு, ஒவ்வாமை போன்றன ஏற்பட்டன.

அவர்களில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

30 வரையான தீயணைப்பு படையினரும், அவசர மருத்துவ உதவிக்குழுவினரும் இணைந்து நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள்  குறித்த பொஸ்பரஸ் குண்டினை பாதுகாப்பாக அகற்றினர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்