Paristamil Navigation Paristamil advert login

அவரின் விக்கெட் ஆட்டத்தை மாற்றிவிட்டது - லார்ட்ஸ் தோல்வி குறித்து பேசிய சுப்மன் கில்

அவரின் விக்கெட் ஆட்டத்தை மாற்றிவிட்டது - லார்ட்ஸ் தோல்வி குறித்து பேசிய சுப்மன் கில்

15 ஆடி 2025 செவ்வாய் 12:37 | பார்வைகள் : 119


லார்ட்ஸ் டெஸ்ட் தோல்வி குறித்து இந்திய அணித்தலைவர் சுப்மன் கில் பேசியுள்ளார்.

 

இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையின் 3வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

 

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி, 387 ஓட்டங்களை எடுக்க, அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 387 ஓட்டங்கள் எடுத்து சமன் செய்தது.

இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 192 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. 193 என்ற வெற்றி இலக்குடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, அடுத்தது விக்கெட்களை இழந்து தடுமாறியது.

மறுமுனையில், ரவீந்திர ஜடேஜா நிதானமாக ஆடி அரைசதம்(61) அடித்தார். 170 ஓட்டங்கள் எடுத்து இந்திய அணி ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம், இங்கிலாந்து அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில், 77 ஓட்டங்கள் மற்றும் 5 விக்கெட்டுகள் எடுத்த இங்கிலாந்து அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தோல்விக்கான காரணம் குறித்து பேசிய இந்திய அணித்தலைவர் சுப்மன் கில், "193 ஓட்டங்கள் என்பது நிச்சயம் எட்டக்கூடிய இலக்குதான். ஒரு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் நிச்சயம் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம்.

5 நாட்களும் போராடிய விதம் மிகவும் பெருமை அளிக்கிறது. அனுபவம் வாய்ந்த வீரராக ஜடேஜா சிறப்பாக ஆடினார். கடைசி வரிசை வீரர்களுடன் சேர்ந்து ஓட்டங்கள் குவித்து, போராடியது பாராட்டத்தக்கது.

முன்வரிசை வீரர்கள் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் கூட வெற்றி பெற்றிருக்கலாம். துரதிஷ்டவசமாக எங்கள் டாப் வரிசை வீரர்களால் அதை செய்ய முடியவில்லை.

கே.எல்.ராகுல் சதமடிப்பதற்காக அந்த ஓட்டம் எடுக்கவில்லை. பண்ட் தான் முதலில் ஓட தொடங்கினார். முதல் இன்னிங்ஸில், ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டது என கூறினார்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்